ponniyin selvan team donates 1cr for kalki foundation

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப்பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d269bb89-ad06-4a78-8c8e-1485927e0555" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-x-300_29.jpg" />

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில்படக்குழு சார்பில் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது. மேலும்'பொன்னியின் செல்வன்' படக்குழு சார்பாக கல்கி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய்நிதியைமணிரத்னம் மற்றும் லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் வழங்கியுள்ளார்கள்.

Advertisment

எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் அன்றைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை புத்தக வாசிப்பாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த 'பொன்னியின் செல்வன்' படமும் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.